இந்தியாவிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தப் பூங்கா மூலம் ரூ.4,500கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பர்னிச்சர் தொழிலுக்கென தனியாக நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்கப்படும் இந்தப் பூங்காவில் மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!