நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

நிதி நிலை


1. வருவாய் பற்றாக்குறை ரூ.7,000 கோடி குறைந்துள்ளது

2. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 4.33 சதவீதத்தில் இருந்து 3.08 சதவீதமாகக் குறையும்

1. Revenue deficit of TN brought down by Rs 7,000 crore

2. Tamil Nadu’s fiscal deficit to decline from 4.33% to 3.08% in FY2022

முக்கிய அம்சங்கள்


 • ‘பசுமை பருவநிலை மாற்ற நிதி’ அமைக்க அரசு முடிவு
 • லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.300 கோடி செலவில் சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்காவை அரசு அமைக்கவுள்ளது.
 • ரூ.36,895.89 கோடி – பள்ளிக்கல்வித் துறைக்கு
 • பேராசிரியர் அன்பழகன் திட்டம் (அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க): ரூ.13,000 கோடி
 • நகை கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு
 • சென்னை கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘Bio-mining’முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
 • குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும்
 • அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும்
 • பிரதமரின் கிராம சாலைத்திட்டம் III-ன் கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை 221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
  (PRADHAN MANTRI GRAM SADAK YOJANA)
 • 500 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் 2213 டீசலில் இயங்கும் பேருந்துகளும் வாங்கப்படும் – நிதியமைச்சர்
 • ரூ.1949 கோடி – புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்
 • ரூ.500 கோடி – சிங்கார சென்னை 2.0 திட்டம்
 • ரூ.1062 கோடி – மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம்
 • ரூ.200 கோடி -இல்லம் தேடி கல்வித்திட்டம்
 • புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்
 • ரூ.20,400.24 கோடி -* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
 • ரூ.3000 கோடி -குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்)
 • ரூ.322 கோடி -பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகை
 • ரூ.8737.71 கோடி -வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை
 • தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதால், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!