Supreme Court of India

வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம. தமிழக அரசு, பாமக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“‘இட ஒதுக்கீடு அடிப்படையில் இருந்தது பழமையான தரவு'” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சமத்துவத்தின் அடிப்படை உரிமைகள் மீறுகிறது. 2021 பிப்ரவரியில் எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரச சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த தமிழக அரசின் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை ரத்து செய்து கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட்து.
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம 31 March 2022 அன்று தீர்ப்பளித்தது

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!