முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை வடிவுஅமைக்க குழுவை நியமித்துஉள்ளர். புதிய கல்விக் குழுவின் தலைவராக டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி. முருகேசன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டுக்கான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவில், யுனிசெப் முன்னாள் கல்வி அதிகாரி அருணரத்னம், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் தொழில்முறை படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது இந்தக் குழு தமிழக மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகளை ஆய்வு செய்யும். பொறியியல், விவசாயம், மீன்வளம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கை பெறுவதற்கான காரணங்களை இந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்து உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். இந்தக் குழு ஒரு வருடத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!