மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்இடஒதுக்கீடு செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மசோதாவை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!