Teachers Eligibility Test (TET) compulsory to continue as teachers in Government Schools

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், (TNTET டெட் ) ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
அரசுப் பள்ளிகளில் பணிப்புரிய ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசாங்கமே 8 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கால அவகாசம் வழங்குவதில் அர்த்தமில்லை.
கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி, ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டத்தின்படி60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அறிவு , திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் எனவும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!